(12. 10. 2025) 28th Sunday of Ordinary Time
28th Sunday in Ordinary
Time
Are We Mere Receivers or True Witnesses?
Luke 17:11-19, challenges us to look beyond receiving God's gifts and embrace the call to profound gratitude and public witness.
| Ten Lepers Cured (v. 14) | Receiving the Gift | Initial Faith and Obedience |
| Nine Did Not Return (v. 17) | Forgetting the Giver | Ingratitude and Spiritual Blindness |
| One Samaritan Returned (v. 15-16) | Giving Thanks and Praising God | Profound Gratitude and Worship |
| "Your faith has saved you" (v. 19) | Receiving Salvation | True Healing and Eternal Benefit |
Core Points of Reflection
The Nature of the Miracle: Ten lepers, alienated from society, cried out to Jesus and were commanded to show themselves to the priests. They were healed on the way, confirming that their initial faith and obedience were rewarded with a physical cure. They all received the gift.
The Question of Ingratitude: Jesus' painful question, "Were not all ten made whole? Where are the other nine? Has none but this foreigner returned to give thanks and praise to God?" cuts to the heart of our spiritual practice. The nine failed because they focused only on the completion of their need (the cure) and not the person of the Giver (Jesus). They were receivers who were spiritually blind.
The Call to Witness (The Samaritan): Only the Samaritan—an outsider—returned. He did more than just say thank you; he "glorified God in a loud voice" (v. 15), becoming a public witness. His act of returning was an act of worship and profound gratitude that validated his cure.
Healing vs. Salvation: The nine received physical healing (their need was met). The one Samaritan received something greater: "Your faith has saved you." (v. 19). The Greek word used here (sesōken) means "saved" or "made whole." His gratitude transformed his physical cure into spiritual wholeness and salvation.
Finally, Our Christian life should not be limited to merely receiving God's blessings. Every blessing—health, food, life itself—is a gift. We are called to be like the one Samaritan, not the forgetful nine. Our response must be a life that returns to the G Giver in worship and gratitude, thereby transforming our physical blessings into eternal salvation and serving as a compelling witness to the world.
Are we receivers or witnesses?
நாம் சான்றிதழ் பெறுபவர்களா?
அல்லது
சான்று பகர்பவர்களா?
அன்புக்குரியவர்களே,
இன்றைய நற்செய்தி (லூக்கா 17:11-19) நமக்கு ஒரு கேள்வியைத் தொடுக்கிறது: நாம் கடவுளிடமிருந்து ஆசீர்வாதங்களைப் பெறுபவர்களாக (சான்றிதழ் பெறுபவர்களாக) மட்டுமே இருக்கிறோமா? அல்லது அதைப் பெற்றுக் கொண்டு, அவரைப் போற்றிப் புகழ்ந்து சான்று பகர்பவர்களாக இருக்கிறோமா?
தொழுநோயால் துன்புற்ற பத்து பேரும் இயேசுவின் இரக்கத்தால் சுகம் பெற்றனர். அவருடைய கட்டளைக்குக் கீழ்ப்படிந்து அவர்கள் புறப்பட்டபோதே நோய் நீங்கியது. இது, இயேசுவின் மீது அவர்கள் கொண்ட சுகம் பெறுவதற்கான நம்பிக்கையையும் கீழ்ப்படிதலையும் காட்டுகிறது. அவர்கள் அனைவரும் இயேசுவின் கொடையைப் பெற்றனர்.
ஆனால், அந்த பத்து பேரில், சமாரியன் ஒருவர் மட்டுமே திரும்பி வந்தார். அவர் பெற்ற சுகத்திற்காக மட்டுமல்ல, அதற்குக் காரணமான கடவுளின் இரக்கத்திற்காக உரத்த குரலில் சான்று பகர்ந்தார். இயேசுவின் காலடியில் விழுந்து, அவர் குணமடைந்ததற்காக நன்றி செலுத்தினார்.
இயேசுவின் வேதனை நிறைந்த கேள்வி இங்கே: “மற்ற ஒன்பது பேர் எங்கே? கடவுளைப் போற்றிப் புகழ அன்னியராகிய உம்மைத் தவிர வேறு எவரும் திரும்பிவரக் காணோமே!”
இந்த ஒன்பது பேரும் சான்றிதழ் பெற்றனர். அவர்கள் நோய் நீங்கியதால் கிடைத்த சுதந்திரத்தைக் கொண்டாட விரைந்து சென்றனர். ஆனால், அவர்கள் சான்று பகரத் தவறிவிட்டனர். அவர்கள் தேவையைப் பூர்த்தி செய்த கொடையாளரைக் குறித்து மறந்தனர்.
ஆனால், திரும்பி வந்த அந்த சமாரியனோ, தான் பெற்ற சுகத்தைக் காட்டிலும் பெரிய ஒன்றைப் பெற்றான். இயேசு அவனிடம், "உமது நம்பிக்கை உமக்கு நலமளித்தது" என்றார். இந்த 'நலம்' என்பது வெறும் உடல்நலம் அல்ல; அது மீட்பும், நிலை வாழ்வுக்கான நலனும் ஆகும். அவன் இயேசுவின் இரக்கத்திற்குச் சான்று பகர்ந்ததால், அவனுக்கு விசுவாசத்தின் முழுமையான பலன் கிடைத்தது.
நாம் ஒவ்வொருவரும் அன்றாட வாழ்வில் எண்ணற்ற ஆசீர்வாதங்களைப் பெறுகிறோம். நாமும் அந்த ஒன்பது பேரைப் போல, நம் தேவைகள் நிறைவேறியவுடன், நாம் பெற்ற ஆசீர்வாதங்களைப் பயன்படுத்திக் கொண்டு, ஆண்டவரை மறந்து, அடுத்த காரியத்தில் கவனம் செலுத்துகிறோமா?
நம்முடைய கிறிஸ்தவ வாழ்வு என்பது வெறும் சான்றிதழ் பெறும் செயலாக இருக்கக்கூடாது. அது நாம் பெற்ற ஒவ்வொன்றுக்கும் சான்று பகரும் வாழ்வாக மாற வேண்டும். நாம் எப்போதும் நம் ஆசீர்வாதங்களுக்காக கடவுளைப் போற்றி, நன்றி சொல்லத் திரும்பி வருவோம். அந்த நன்றி உணர்வே, நாம் பெற்ற சுகத்தை ஆன்மீக நலனாக மாற்றி, இயேசுவுக்குச் சான்று பகர நம்மைத் தூண்டும். ஆமென்.
Comments
Post a Comment