(22.02.2026) 1st Sunday of Lent
தவக்காலம் முதல் ஞாயிறு
சோதனைகளை வென்று தூய்மை பெறுவோம்
தவக்காலம் என்பது ஒரு ஆன்மீகப் பயணம். இன்று நாம் பாலைநிலத்தில் இயேசுவோடும், ஏதேன் தோட்டத்தில் முதல் பெற்றோரோடும் பயணிக்கிறோம். சோதனை என்பது விழுவதற்கு அல்ல, நம் விசுவாசத்தை உறுதிப்படுத்துவதற்கு என்பதை இன்றைய வாசகங்கள் காட்டுகின்றன.
அ) வீழ்ச்சியின் தொடக்கம்: ஏதேன் தோட்டத்தில் சோதனை (முதல் வாசகம்)
முதல் மனிதர்களான ஆதாமும் ஏவலும் சோதிக்கப்பட்ட நிகழ்வை முதல் வாசகம் விவரிக்கிறது.
பாம்பின் சூழ்ச்சி: பாம்பு கடவுளின் வார்த்தையின் மீது சந்தேகத்தை எழுப்பியது. "நீங்கள் சாகவே மாட்டீர்கள்" என்று பொய் சொல்லி, அவர்களைக் கடவுளுக்கு எதிராகத் தூண்டியது.
ஆசையே அழிவு: அந்தப் பழம் "உண்பதற்குச் சுவையானது, அறிவு பெற விரும்பத்தக்கது" என அவர்கள் நினைத்தார்கள். கடவுளுக்குக் கீழ்ப்படிவதை விட, சுய விருப்பத்திற்கு முன்னுரிமை கொடுத்ததே பாவத்தின் தொடக்கம்.
ஆ) மீட்பின் வெற்றி: இயேசு என்னும் புதிய ஆதாம் (இரண்டாம் வாசகம்)
புனித பவுல் ஆதாமையும் இயேசுவையும் ஒப்பிடுகிறார்.
ஆதாம் (கீழ்ப்படியாமை): ஒரு மனிதனின் குற்றத்தால் பாவம் உலகிற்குள் நுழைந்தது, சாவு ஆட்சி செலுத்தியது.
இயேசு (கீழ்ப்படிதல்): ஒரே ஒரு மனிதராகிய இயேசுவின் ஏற்புடைய செயலால் எல்லா மனிதருக்கும் வாழ்வளிக்கும் விடுதலைக் கிடைத்தது. பாவம் பெருகிய இடத்தில் அருள் அதையும் விட மிகுதியாகப் பெருகியது.
இ) பாலைநிலப் போராட்டம்: சோதனையை வென்ற இயேசு (நற்செய்தி)
இயேசு நாற்பது நாள் நோன்பிருந்து, அலகையினால் சோதிக்கப்படுகிறார்.
உடல் சார்ந்த சோதனை (அப்பம்): பசியின் போது கல்லை அப்பமாக்கச் சொல்கிறது அலகை. இயேசு இறைவார்த்தையால் பதிலடி கொடுக்கிறார்.
ஆணவம் சார்ந்த சோதனை (உயரம்): கோவிலின் உச்சியிலிருந்து குதிக்கச் சொல்லி கடவுளைச் சோதிக்கத் தூண்டுகிறது. இயேசு பணிவோடு மறுக்கிறார்.
அதிகாரம் சார்ந்த சோதனை (உலக அரசுகள்): தன்னை வணங்கினால் உலகையே தருவதாக அலகை கூறுகிறது. "ஆண்டவர் ஒருவருக்கே பணி செய்" என்று இயேசு விரட்டுகிறார்.
Victory Over Temptation: The Lenten Journey
Lent is a season of spiritual combat. Today, we stand between the Garden of Eden and the Judean Wilderness. The readings highlight the reality of temptation and the triumph of grace through Jesus Christ.
A. The Fall of Humanity (First Reading)
The First Reading takes us back to the beginning.
The Deceit of the Serpent: The temptation started with a doubt about God's command. The serpent promised divinity but brought shame.
The Root of Sin: Adam and Eve chose self-will over God's will. Their desire for immediate gratification led to a broken relationship with God.
B. The Gift of Grace (Second Reading)
St. Paul contrasts Adam and Jesus.
Adam brought death: Through one man’s disobedience, many became sinners.
Jesus brought life: Through Jesus’ perfect obedience, grace and justification are offered to all. Where sin increased, grace abounded all the more.
C. The Triumph in the Desert (Gospel)
Jesus, led by the Holy Spirit, faces the devil after forty days of fasting.
Economic/Physical Temptation: "Turn stones into bread." Jesus relies on the Word of God as true sustenance.
Spiritual Pride: "Throw yourself down." Jesus refuses to put God to the test.
Power and Worship: "Worship me and I will give you the world." Jesus declares that worship belongs to God alone.
சோதனையின் மூன்று முகங்கள்:
இன்றும் நாம் வயிறு (பொருள் ஆசை), புகழ் (ஆணவம்), அதிகாரம் ஆகிய மூன்று வழிகளில் சோதிக்கப்படுகிறோம். இயேசுவைப் போல இறைவார்த்தையை ஆயுதமாக ஏந்தினால் மட்டுமே இவற்றை வெல்ல முடியும்.
இறைவார்த்தை எனும் உணவு: "மனிதர் அப்பத்தினால் மட்டுமல்ல, கடவுளின் சொல்லால் வாழ்வர்." இந்தத் தவக்காலத்தில் விவிலிய வாசிப்பிற்கு அதிக முக்கியத்துவம் கொடுப்போம்.
மனம் திரும்புதல்: பதிலுரைப் பாடல் (திபா 51) கூறுவது போல, "தூயதோர் உள்ளத்தை என்னுள்ளே படைத்தருளும்" என்று மன்றாடுவோம். நம் பாவங்களை ஏற்றுக்கொண்டு கடவுளின் அளவற்ற இரக்கத்தை நாடுவோம்.
விழிப்புணர்வு: அலகை எப்போதும் மிகவும் கவர்ச்சியான முறையில்தான் நம்மை அணுகும் (பாம்பு பழத்தைக் காட்டியது போல). எது கடவுளின் விருப்பம், எது அலகையின் சூழ்ச்சி என்பதைப் பிரித்தறியும் ஞானத்தை வேண்டுவோம்.
தவக்காலத் தீர்மானம் (Lenten Resolution)
நோன்பு: நம்முடைய தீய பழக்கங்களிலிருந்து (கோபம், பொய், இச்சை) நோன்பிருப்போம்.
செபம்: தினமும் அமைதியாக இறைவனோடு உரையாட நேரம் ஒதுக்குவோம்.
தர்மம்: நம்மிடம் இருப்பதைப் பகிர்ந்து, கிறிஸ்துவின் அன்பை வெளிப்படுத்துவோம்.
Comments
Post a Comment